சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஆகஸ்ட் 2) முதல் தொடங்குகிறது.இந்த நிலையில், சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வியடைந்தோம். ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றோம். அந்த தோல்விகளுக்குப் பிறகு அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அமர்ந்து பேசினோம். சிறப்பாக திட்டங்களை வகுத்து வெற்றி பெற வேண்டும் என ஆலோசனை செய்தோம்.பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நாங்கள் என்னப் பேசினோமோ அதற்கேற்ப சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். எங்களது திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற வேண்டும்.சொந்த மண்ணில் இதுவரை நாங்கள் பெற்றுள்ள வெற்றிகளை நினைத்து மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், சொந்த மண்ணை எங்களது கோட்டையாக மாற்ற வேண்டும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் இங்கு வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்ற சூழலை நாங்கள் உருவாக்க வேண்டும். ஏனெனில், எதிரணிகளைக் காட்டிலும் இங்குள்ள ஆடுகளங்களின் தன்மை குறித்து எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.West Indies captain Roston Chase has stated that they must turn their home turf into a fortress.டெஸ்ட் கேப்டன் பொறுப்பு மிகவும் கடினமானது: ஜோ ரூட்