மேக்கேதாட்டு விவகாரம்! முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்

Wait 5 sec.

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டினால், தமிழகத்தில் குறிப்பாக விவசாயிகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாவர் என தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், மேக்கேதாட்டு அணையைக் கண்டிப்பாகக் கட்டப்படும் என கர்நாடக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.இந்த நிலையில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய்யின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 31) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார், தலைமைச் செயலாளர், துறைகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.மேலும், கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் உள்பட அமைச்சர்களும் ஆக. 3-ல் கர்நாடகம் செல்லவுள்ளனர்.தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்: மு.க. ஸ்டாலின்Mekedatu Dam Issue: Consultative Meeting Today Chaired by the CM Vijay