திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும். ‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென ஜூலை 30 முதல் ஆக. 2 வரை மத்திய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத நடவடிக்கை ஆகும். நீட் தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது. திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைக்கு அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளாரகுதிரை பேர வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணைVCK Chief Thol. Thirumavalavan requests the CM Vijay for permission for the Dravidar Kazhagam's campaign