பிரதமர் நிவாரண நிதி குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மக்கள் பணம் எங்கே பிரதமர் மோடி அவர்களே? பொதுமக்களின் வியர்வைச் சிந்திய பணமும், அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்பும் இணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதமர் நிவாரண நிதி (PM Cares).2022 - 23 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ. 909.64 கோடி நன்கொடை உள்பட ரூ. 6,723.07 கோடி வரவு வந்த நிலையில், அதில் வெறும் ரூ. 439.38 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, மீதம் ரூ. 6,283.68 கோடி கையிருப்பில் உள்ளது. 2022 - 23க்கு பின் அறிக்கை வெளியிடப்படாதது ஏன்? அமைச்சர்கள் இருக்கும் அமைப்பிற்கு தகவல் அறியும் உரிமை பொருந்தாது எனக் கூறித் தப்பிப்பது ஏன்?இதன் அறங்காவலர்களாக மத்திய அமைச்சர்கள் பொறுப்பில் இருக்கும்போது, சட்டப்படி பொது ஊழியர்களான அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்.எனவே,பிரதமர் நிவாரண நிதி நிச்சயம் தகவல் அறியும் உரிமை வரம்புக்குள்தான் வருகிறது. மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மீறல்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகம்!Manickam Tagore MP urges the Central Government to release a audit statements of PM Cares Fund