தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (ஜூலை 31)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 106,040-க்கு விற்பனையாகிறது.சென்னையில் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 106,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.அதன்பிறகு, ஒரு சவரன் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 105,720-க்கும், புதன்கிழமை ரூ. 105,240-க்கும், வியாழக்கிழமை ரூ. 105,840 என விற்பனையாகி வந்தது.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 13,255-க்கும், ஒரு சவரன் ரூ. 106,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளியின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 235-க்கும், ஒரு கிலோ ரூ. 2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.Today july 31 Gold and Silver Rate in Chennai இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறதா? டிரம்ப் அறிவிப்பு