இஸ்ரேல் - காஸா போருக்கு மத்தியில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.2023 அக்டோபர் மாதத்தில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதையடுத்து, காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தப் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு உலக நாடுகளில் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும்கூட, காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தை காஸா அமைதி வாரியம் மேற்கொள்ளவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைப்பதால், காஸாவில் புதிய பாலஸ்தீன அரசு உருவாவதற்கான முக்கியமான முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தேசிய காஸா நிர்வாகக் குழுவிடம் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, காஸாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறும் என்றும், சர்வதேச படையும் புதிய பாலஸ்தீனத்தின் காவல்துறையும் காஸா மக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.இருப்பினும், காஸாவில் போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரையில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.உக்ரைனில் பரவலாக ரஷியா வான்வழித் தாக்குதல்Hamas says it has agreed to disarm in Gaza after US President Trump announces Board of Peace plan