தமிழகத்தில் மின்கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்திருப்பதாக தவெக அரசு மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...முதலில் மின்வெட்டுப் பிரச்னை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்னை.3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் அளவீடுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.ஜனநாயக விரோதம்! திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி வேண்டும்: திருமாவளவன் கோரிக்கைM.K. Stalin accuses the TVK government of causing hardship to the public regarding electricity charges in Tamil Nadu