காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மீறல்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகம்!

Wait 5 sec.

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதிலும், தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடகம் இன்று திறந்து விடவில்லை.தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.இருப்பினும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தாமல், தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க மறுத்தது.ஆனால், கர்நாடகத்தில் போதிய அளவில் தண்ணீர் இல்லை என கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுப்பு தெரிவித்தது.இதனையடுத்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி, தமிழகத்துக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமையில் (ஜூலை 30) உத்தரவிட்டது.ஆனால், இன்றும் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை.கர்நாடகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்வரத்து வியாழக்கிழமையில் (ஜூலை 30) 5,202 கன அடியாக இருந்த நிலையில், இன்று (ஜூலை 31) 7,058 கன அடியாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை என தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது.மேக்கேதாட்டு விவகாரம்! முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்Karnataka refuses to release Cauvery water to Tamil Nadu