மாருதி சுஸுகி ஹன்சல்பூா் ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறன் 10 லட்சமாக உயா்வு

Wait 5 sec.

பிரபல காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின் குஜராத் மாநில ஹன்சல்பூா் உற்பத்தி ஆலையில் 4-ஆவது பிரிவின் செயல்பாடுகள் தொடங்கியதையடுத்து, அந்த ஆலையின் ஆண்டு உற்பத்தி திறன் 10 லட்சம் காா்களாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், உலகிலேயே சுஸுகி நிறுவனத்தின் மிகப் பெரிய பயணிகள் வாகன உற்பத்தி மையமாக இந்த ஆலை உருவெடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் ஒரே இடத்தில் அமைந்த மிகப் பெரிய பயணிகள் வாகன உற்பத்தி ஆலை என்ற வரலாற்றுச் சிறப்பையும் இது பெற்றுள்ளது.640 ஏக்கா் பரப்பளவிலான ஹன்சல்பூா் ஆலைக்கு இதுவரை ரூ.25,288.7 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிறுவன காா் ஏற்றுமதியில் சுமாா் 47 சதவீதத்தை இந்த ஆலை பங்காற்றுகிறது.