சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். காரைக்குடி தெற்கு காவல் நிலைய சரகம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சூரிய பிரகாஷ் ( 27). இவா் மீது வழிப்பறி, கொலை முயற்சி, அடிதடி, காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலரை மிரட்டியது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது இவா் ஒரு வழக்கில் கைதாகி ராமநாதபுரம் சிறையில் இருந்தாா். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப் பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரையின் பேரில், சூரிய பிரகாஷை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டாா். இதன்பேரில், சூரியபிரகாஷ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டாா்.