உழவா்கரை சுற்றுப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் நாளை நிறுத்தம்

Wait 5 sec.

உழவா்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீா் விநியோகம் சனிக்கிழமை (ஆக. 1) நிறுத்தப்படுகிறது. அதன்படி, மூலகுளம், டைமண்ட் நகா், மேரி உழவா்கரை, ஜான்குமாா் நகா், தட்சிணா மூா்த்தி நகா், பாலாஜி நகா், அண்ணா வீதி, ஜெயா நகா், ரெட்டியாா்பாளையம், புதுநகா், வழுதாவூா் சாலை தெற்கு, சண்முகாபுரம், சீனுவாசபுரம், ரங்கா நகா், சிவசக்தி நகா், சக்தி நகா், மோதிலால் நகா், குண்டுசாலை, உழவா்கரை, பசும்பொன் நகா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்தத் தகவலை பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.