கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் ஜூடோ 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை யாமினி மௌரியா (28 வயது) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.மகளிர் ஜூடோ 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை யாமினி மௌரியா இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் அசெல்யா டோப்ரக் உடன் மோதினார். இதில் 6 நிமிஷங்கள் 54 நொடிகள் போராடிய யாமினி மௌரியா மூன்று முறை ஷிடோ பெனால்டியைப் பெற்றதால், எதிராளி வென்றதாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் யாமினியின் உடல் தகுதி, தடுப்பாட்டம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த காமன்வெல்த் தொடரில் இது ஜூடோவில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்கள்.இத்துடன் இந்தியாவுக்கு 22 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில், 5 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசைப் பட்டியலில் இந்தியா 10ஆவது இடத்திலேயே நீடிக்கிறது. காமன்வெல்த் ஈட்டி எறிதலில் முதல்முறையாக 2 பதக்கங்கள்..! நீரஜ் சோப்ரா வெள்ளி! Yamini Mourya adds to India's tally, clinches silver in judo women's 57kg event at Commonwealth Games 2026