கேரளத்தில் நிலச்சரிவு; எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார்: வி.டி. சதீசன்

Wait 5 sec.

கேரளத்தில் கனமழையால் ஏற்படும் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார் என அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தெரிவித்துள்ளார்.கேரளத்தில் வடகிழக்குப் பருவமழை தாமதமாகத் தொடங்கியது. சில நாள்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வாகமன், அடூர் மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டு, காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.இதுகுறித்து வி.டி. சதீசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக வந்த தகவல்களின் அடிப்படையில் வருவாய்த்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.பேரிடர் தடுப்புப் பணிகள், வருவாய்த்துறை அமைச்சர் அனில் குமார் தலைமையில் ஒருங்கிணைக்கப்படும். எந்தவொரு சூழ்நிலையையும் கையாள தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை ஆகியவை தயாராக உள்ளன. காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும், மறுவாழ்வுப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்துள்ளது என்று வி.டி. சதீசன் குறிப்பிட்டுள்ளார்.സംസ്ഥാനത്തിൻ്റെ വിവിധ ഭാഗങ്ങളിൽ ശക്തമായ മഴ തുടരുകയും ചിലയിടങ്ങളിൽ മണ്ണിടിച്ചിലും ഉരുൾപൊട്ടലും റിപ്പോർട്ട് ചെയ്യപ്പെട്ട സാഹചര്യത്തിൽ റവന്യൂ മന്ത്രിയുമായും ചീഫ് സെക്രട്ടറിയുമായും ജില്ലാ കളക്ടർമാരുമായും ഫോണിൽ ബന്ധപ്പെട്ടു.ദുരന്തനിവാരണ പ്രവർത്തനങ്ങൾ റവന്യൂ മന്ത്രി ഏകോപിപ്പിക്കും.…— V D Satheesan (@vdsatheesan) August 1, 2026கேரளம்: இடுக்கியில் நிலச்சரிவு; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!Kerala Chief Minister V.D. Satheesan stated on Saturday (August 1) that the state is prepared to handle any situation arising from heavy rains.