மைசா படத்தின் படப்பிடிப்பில் நடிகை ரஷ்மிகாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் மைசா என்ற படத்தில் கதைநாயகியாக நடிகை ரஷ்மிகா நடித்து வருகிறார். கதைநாயகியை மையமாக எடுக்கப்படும் இந்தப் படத்தில் கோண்டு இனத்தைச் சேர்ந்த பெண்ணாக ரஷ்மிகா நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மைசா உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.கேரளத்தின் அதிரப்பள்ளியின் காட்டுப்பகுதியில் மைசா படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும்நிலையில், ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பில் ரஷ்மிகா நடனமாடும்போது எதிர்பாராதவிதமாகத் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, ரஷ்மிகாவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முழுமையாக குணமடைய 6 வாரங்களுக்குக் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.கர்நாடகத்தில் ஜன நாயகனுக்கு வந்த புது பிரச்னை! திரையரங்கு காட்சிகள் ரத்துRashmika Mandanna Suffers Hip Injury, Out Of Action For 6 Weeks