மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் கண்ணோட்டம் தேவையில்லை: அமைச்சர் ராஜேஷ் குமார்

Wait 5 sec.

மேக்கேதாட்டு விவகாரத்தில் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.சென்னை செய்தியாளருடன் அமைச்சர் ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) பேசியதாவது, "மேக்கேதாட்டு பிரச்னையைப் பொருத்தவரையில், தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்கெனவே தெளிவான நிலைப்பாட்டில்தான் உள்ளது. தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதே எங்களின் முன்னுரிமையாகும்.இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியது. அதனைப் புறக்கணிக்க முடியாது. மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அதன் தீர்ப்புகளைக் கூறியுள்ளது. ஆகையால், இதில் சட்ட மற்றும் நீதித் துறைரீதியாக ஏற்கெனவே விவரிக்கப்பட்டு விட்டது.இதனை அரசியலில் ஒற்றுமை, மனிதநேயம், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்த புரிதலுடன் அணுகுதல் வேண்டும். இதில் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.சென்னை வந்தார் ராகுல் காந்தி! காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்புProtecting the interests of Tamil Nadu's farmers remains our priority, says Minister S Rajesh Kumar