விரட்டி அடியுங்கள்! புயலைக் கிளப்பிய ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு

Wait 5 sec.

நடிகர் ஜெயம் ரவி என்று அறியப்படும் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்கு வந்த அதே வேளையில், ரவி - கெனிஷா நட்பும் வெளிச்சத்துக்கு வந்து விவாகரத்து புயல் சூறாவளியாக மாறியது.அவ்வப்போது கெனிஷாவின் பதிவு, ஜெயம் ரவியின் செய்தியாளர் சந்திப்பு, ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் சமூக வலைத்தளங்களை அலற விடுவது வழக்கம். அந்த வகையில், ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. அவர் அதில் பெரிதாக எந்த விஷயத்தையும் பெயர்களையும் குறிப்பிடவில்லை. எதற்காக இதைச் சொல்லியிருக்கிறார் என்று கூட தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அனைவருக்குமே அகராதியே இல்லாமல் புரிந்துவிட்டிருக்கிறது.அண்மையில்தான், ஆர்த்தி ரவி, நீதிமன்றத்தில் மாத செலவுக்கு பெரிய தொகை ஒன்றை கோரியிருந்த நிலையில், ஜெயம் ரவி மாதம் மூன்று லட்சம் வழங்கவும், பிள்ளைகளைப் பார்க்க அனுமதி அளித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில்தான், ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “யாராவது உங்களைச் குணப்படுத்துவதாகக் கூறினால், அவர்களை அங்கிருந்து விரட்டி அடியுங்கள்.” என்று பதிவிட்டுள்ளது விவாதப்பொருளாகியிருக்கிறது.இந்த பதிவில், அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் நேரடியாக கெனிஷாவைத்தான் குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். காரணம், ஜெயம் ரவிக்கு ஹீலர் என்ற முறையில் அறிமுகமானவர்தான் கெனிஷா. பிறகு இருவருக்குள்ளும் நட்பு மலர்ந்து அவர்கள் ஒன்றாகவே பொது வெளியில் தோன்றத் தொடங்கினர்.ஆர்த்தியின் இந்த பதிவுக்கு பல்வேறு ரியாக்ஷன்கள் வந்துள்ளன. எதற்கான இந்தப் பதிவை அவர் செய்தார் என்றுகூட ஆர்த்தி கூறவில்லை. ஆனாலும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு, ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாக அறிவித்தனர். தொடர்ந்து இவர்களது விவாகரத்து வழக்குச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அண்மையில்தான் இவர்களது வழக்கில், ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு, மகன்களைப் பார்க்கவும் அனுமதி வழங்கியிருந்தது. இது ஆர்த்திக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில், இந்த பதிவு வெளியாகியிருக்கிறது. Drive them away! Aarthi's Instagram post stirs up a storm.தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் என்ன சொல்கிறார்?