பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் வயது முதிர்வினால் பெங்களூரில் காலமானார். தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் சுமார் 6,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை வென்றுள்ளார். முதன்முதலாக 1944ல் தெலுங்கில் தாசில்தார் படத்தில் பாடகியாக அறிமுகமான ஜமுனா ராணி தமிழில் கல்யாணி எனும் படத்தில் 1952ல் தனது முதல் பாடலைப் பாடினார். பின்னர்,1950- 1990வரை பல்வேறு தமிழ்ப் படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். நாயகன் படத்தில் நீ சிரித்தால் தீபாவளி எனும் பாடலைப் பாடியுள்ளார். கடைசியாக தமிழில் 1992ல் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற படத்தில் இரவு நாடகன் எனும் படத்தில் பாடினார். அவரது திரை வாழ்வில் 2012ல் தெலுங்கில் லஷ்மி நடித்த மிதுனம் எனும் படத்தில் எவரு கெலிசாரிப்புடு எனும் பாடலை பாடியிருந்தார். தனது 7 வயதிலேயே பாடல் பாடத் தொடங்கிய ஜமுனா ராணி கடைசிவரை திருமணம் செய்யாமலே இறந்துவிட்டார். ஜே.பி. சந்திரபாபு உடன் குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே பாடம் அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.Deeply saddened by the passing of legendary playback singer K. Jamuna Rani garu. Her timeless voice and unforgettable songs have left an everlasting mark on Indian music.Heartfelt condolences to her family, friends, and countless admirers.May her soul rest in peace. ️… pic.twitter.com/Q72GxU8ecE— Mango Music (@MangoMusicLabel) July 31, 2026தனுஷ் 56 படத்தில் உறியடி விஜய்குமார்? எகிறும் எதிர்பார்ப்பு!Veteran playback singer Jamuna Rani passes away