மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே காரணம் என மக்களைவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (ஜூலை 29) குற்றம் சாட்டினார். மக்களவையில் இன்று ராகுல் காந்தி பேசுவதற்கு அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார். அவையில் பேச நினைத்ததை செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன் என அவையில் ராகுல் குறிப்பிட்டார். இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது:''மக்களவையில் பேசுவதற்கான வாய்ப்பை அளிக்க மறுக்கிறார் அவைத் தலைவர். நான் பேசுவதற்காக அவையில் ஒழுங்கைக் கொண்டுவருமாறு பலமுறை கோரிக்கை வைத்தேன். ஆனால், அனுமதி கொடுக்கப்படவில்லை. இளைஞர்கள் போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு காரணமானவர்கள் குறித்துப் பேச அனுமதி கேட்டிருந்தேன். ஜந்தர் மந்தரில் இருந்து தொடங்கிய பேரணியில் பெண்கள், சிறுமிகள் மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்களைத் தாக்க பயன்படுத்தப்பட்ட தடிகளில் ஆணிகள் பொருத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதலுக்கு அமித் ஷாவே காரணம். நான் மன்னிப்பு கேட்டால் அவையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒருபோதும் பாஜக, ஆர்எஸ்எஸ் அல்லது அவற்றுடன் தொடர்புடைய எவரிடமும் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தபோது காவல் துறைக்கு அமித் ஷா தொலைபேசியில் பேசியதை நானே கண்டேன். அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் இருந்து அமித் ஷாவுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. அதனால் போராட்ட சாலையில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது அமித் ஷாவுக்குத் தெரியும்'' என ராகுல் குறிப்பிட்டார். நீட் போராட்டம்: 4 மாதங்களாக ரஷியாவில் இருப்பவர் மீது வழக்குப்பதிவு! விடியோ வைரல்!Amit Shah himself is responsible for the police attack on students: Rahul Gandhi.