காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஐந்தாவது பதக்கத்தை உறுதிசெய்த சாக்‌ஷி!

Wait 5 sec.

கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்‌ஷி சௌதரி (25 வயது) அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23 தொடங்கின. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க, இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சாக்‌ஷி சௌதரி மகளிர் 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனை கேட்லின் ஃப்ரையர்ஸ் உடன் மோதினார். இந்தக் காலிறுதிப் போட்டியில், சாக்‌ஷி சௌதரி 3 சுற்றுகளிலும் வென்றார். அனைத்து நடுவர்களும் சாக்‌ஷிக்கு ஆதரவாகவே புள்ளிகளை வழங்கியதால், 5-0 என அபார வெற்றியைப் பதிவுசெய்தார். முன்னதாக, லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ எடைப் பிரிவு), ப்ரியா கங்காஸ் (60 கிலோ எடைப் பிரிவு), ப்ரீத்தி பவார் (54 கிலோ எடைப் பிரிவு), ஜடுமானி சிங் (55 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் பதக்கம் வெல்லும் நிலையில், இதில் ஐந்தாவது வீராங்கனையாக சாக்‌ஷி இணைந்துள்ளார்.சாக்‌ஷி தனது பலமான தூரத்தில் இருந்து தாக்குதலில் சிறப்பாகச் செயல்பட்டார். தனது உயரம், கால் நகர்கத்தலில் அற்புதமாக விளையாடிய சாக்‌ஷி அபார வெற்றியைப் பதிவு செய்தார். TOPS Development athlete Sakshi delivered an outstanding performance in the Women's 51kg Quarter-finals at the Commonwealth Games 2026, defeating Caitlin Fryers of Northern Ireland by a 5–0 unanimous decision.With this victory, Sakshi has secured at least a Medal and advanced… pic.twitter.com/1OgyE7LJZE— SAI Media (@Media_SAI) July 29, 2026காமன்வெல்த்: பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த சஞ்சனா!Sakshi assures fifth boxing medal for India at CWG