கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி சௌதரி (23 வயது) அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு, குத்துச்சண்டைப் பிரிவில் ஆறாவது பதக்கத்தையும் உறுதிசெய்துள்ளார்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23ல் தொடங்கின. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி சௌதரி மகளிர் 70 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை மார்கன் ஹென்டர்சன் உடன் மோதினார்.இந்தப் போட்டியில், சாக்ஷி சௌதரிக்கு மூன்று நடுவர்கள் சாதகமாகவும் ஒரு நடுவர் மார்கன் ஹென்டர்சனுக்கு ஆதரவாகவும் ஒரு நடுவர் சமமான புள்ளிகளையும் வழங்கினார்கள். இதன் மூலம், மெஜாரிட்டி ஸ்பிலிட் முறையில் 3-1 என சாக்ஷி சௌதரி வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக, லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ எடைப் பிரிவு), ப்ரியா கங்காஸ் (60 கிலோ எடைப் பிரிவு), ப்ரீத்தி பவார் (54 கிலோ எடைப் பிரிவு), ஜடுமானி சிங் (55 கிலோ எடைப் பிரிவு), சாக்ஷி சௌதரி (51 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் பதக்கம் வெல்லும் நிலையில், இதில் ஆறாவது வீராங்கனையாக அருந்ததி சௌதரி இணைந்துள்ளார்.இந்த அரையிறுதிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இந்தியா 12 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், குத்துச்சண்டையில் 6 உறுதியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.TOPS Core athlete Arundhati Choudhary booked her place in the Women's 70kg Semi-finals at the Commonwealth Games 2026 after defeating Morgan Henderson of New Zealand by a 3–1 split decision in the quarter-finals.With this victory, Arundhati has secured at least a Medal for… pic.twitter.com/9skAJYkm7Q— SAI Media (@Media_SAI) July 29, 2026காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஐந்தாவது பதக்கத்தை உறுதிசெய்த சாக்ஷி! Arundhati Choudhary assures sixth boxing medal for india at cwg