தருமபுரி மாவட்டத்துக்கு ஆக. 3-ல் உள்ளூர் விடுமுறை!

Wait 5 sec.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்துக்கு ஆக. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு ஆக. 3 ஆம் தேதி (திங்கள்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உள்ளூர் விடுமுறையானது தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.உள்ளூர் விடுமுறை நாளில் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறைக்குப் பதிலாக, ஆக. 8 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில்,  ஆடி 18-ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.A local holiday has been announced for Dharmapuri district on August 3rd in connection with the Aadi Perukku festival.திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!