ஆம்பூா் அருகே தேவலாபுரம் நாகாலம்மன் கோயிலில் ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. அருள்மிகு நாகாலம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து, குடும்ப நலன் மற்றும் வளமான வாழ்வு வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினா். கூழ் வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.