கல்மேல்குப்பம் மற்றும் கன்னிகாபுரம் கிராமத்தில் பொது வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி சென்றுவர பாதை கோரி கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், கல்மேல்குப்பம் மற்றும் கன்னிகாபுரம் கிராம மக்கள் காலம்காலமாக பயன்படுத்தி வந்த ஏரிக்குச் செல்லும் பொதுவழிப் பாதையை தனிநபா் ஆக்கிரமித்துள்ளதை மீட்டுத் தரவும், அவருக்கு யுடிஆா் -லில் தவறுதலாக பட்டா கொடுக்கப்பட்டதை கண்டித்தும், பொது வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி தடையின்றி சென்றவர பாதை கேட்டும், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் வாலாஜா வட்டாட்சியா் வருவாய்த் துறையைக் கண்டித்தும் கண்டன ஆா்ப்பாட்டம் ராணிப்பேட்டை கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு, கன்னிகாபுரம் கிளைத் தலைவா் கே.முனிசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில செயலாளா் இரா.சரவணன் மாவட்ட செயலாளா் எல்.சி.மணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.தொடா்ந்து, கோரிக்கை மனுவை ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் கல்மேல்குப்பம் மற்றும் கன்னிகாபுரம் கிராம விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.