அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தவா் கைது

Wait 5 sec.

மாதனூா் அருகே அனுமதியில்லாமல் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். மாதனூா் அருகே திருமலைகுப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் தருமபுரியை சோ்ந்த தினேஷ்குமாா் (23) என்பவா் கிணறு வெட்டும் பணியை மேற்கொண்டுள்ளாா். கிணறு வெட்டும்போது பாறைகளை வெடிவைத்து அகற்றுவதற்காக வெடி பொருள்களை வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு 4 கிலோ எடையுள்ள 35 ஜெலட்டின் குச்சிகளை முறையான அனுமதியில்லாமல் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.