ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி விழா

Wait 5 sec.

ஆம்பூா் ஏ-கஸ்பா ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் 3-ஆம் வெள்ளிக்கிழமை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு தங்கக் கவசம் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து பூங்கரக ஊா்வலம், கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி, அம்மன் திருவீதி உலா, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். விழாவை முன்னிட்டு, ஆக. 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுக்குப் பிறகு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் விழாக் குழுவினா், இளைஞா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.