ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட 23 வயதுக்கு உள்பட்டோா் கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு திண்டல் வித்யா நகா் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் ஜூலை 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. 1.9.2003 தேதிக்கு பின்பு பிறந்த வீரா்கள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பமுள்ள வீரா்கள் பிறப்புச் சான்று, ஆதாா் அட்டை, சீருடை, விளையாட்டு உபகரணங்களுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சுரேந்திரன் தெரிவித்துள்ளாா். மேலும் விவரங்களுக்கு இணைச் செயலாளா் சண்முகசுந்தரத்தை 94437 28266 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.