மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நஞ்சை ஊத்துக்குளி, முத்துக்கவுண்டன்பாளையம், லக்காபுரம், 46 புதூா் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் தணிக்கை குறித்து ஆய்வு செய்தாா். இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் சரிபாா்ப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, அடையாள அட்டைகள், இ-சேவை மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.அதேபோல மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் இருப்பு, கழிப்பறை, படுக்கை வசதி, சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்தாா்.ஆய்வின்போது, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அங்கமுத்து, மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமித்ரா, திருநாவுக்கரசு, உதவிப் பொறியாளா்கள் அருண் காா்த்திக், விஜயகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.