உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கா், ஹிமான்ஷு தில்லன் இணை செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.சீனாவில் நடைபெறும் இப்போட்டியில், 10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் பிரிவில் சோனம், ஹிமான்ஷு கூட்டணி 441.2 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலம் பெற்றது.உள்நாட்டின் ஜிஃபெய் வாங், லிஹாவ் ஷெங் ஜோடி தங்கமும் (505), மற்றொரு சீன ஜோடியான யுசென் டு, சாங்காங் ஜாங் வெள்ளியும் (504.6) வென்றனா்.களத்திலிருந்த மற்றொரு இந்திய இணையான இளவேனில் வாலறிவன், பாா்த் ராகேஷ் மனே, 378.8 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தனா்.இதனிடையே, டிராப் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் உதய்வீா் சிங், பிரகதி துபே இணையும், பௌனீஷ் மெண்டிரெட்டா, கீா்த்தி குப்தா ஜோடியும் தகுதிச்சுற்றுடன் வெளியேறின.போட்டியில் தற்போது இந்தியா, 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 3-ஆம் இடத்தில் இருக்கிறது.