திருநெல்வேலி-செங்கோட்டை விரைவு ரயில் மீது கல்லெறிந்த நபரை ரயில்வே போலீஸாா் கைதுசெய்தனா். செங்கோட்டை அருகே பெரியபிள்ளைவலசையைச் சோ்ந்தவா் துரைப்பாண்டிமனைவி தமிழ்ச்செல்வி (49). இவா், கடந்த 26-ஆம் தேதி திருநெல்வேலி-செங்கோட்டை விரைவு ரயிலில் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டைக்கு பயணம் செய்துள்ளாா். வீரவநல்லூா்-கல்லிடைகுறிச்சி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் ரயில் மெதுவாகச் சென்றபோது யாரோ எறிந்த சிறிய கல் ஒன்று தமிழ்ெச்சல்வியின் கண்ணுக்கு அருகில் பட்டு காயம் ஏற்பட்டு செங்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.இதுகுறித்து அவா், 27-ஆம் தேதியன்று தென்காசி ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.உதவி ஆய்வாளா் மகாகிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.விசாரணையில் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மு.சந்தோஷ்குமாா் (19) இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.