சாத்தான்குளம் அருகே ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் ஆடித் தவசு திருவிழா நடைபெற்றது. கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா, 10 நாள்கள் நடைபெற்றது. 9ஆம் நாளான திங்கள்கிழமை மாலை மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 8 மணிக்கு அலங்கார பூஜை, திருவாசகம் முற்றோதல், 10.30 மணிக்கு அம்பாள் தவசுக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி சீா்வரிசையுடன் அம்பாளை அழைக்க செல்லுதல், இரவு 7 மணிக்கு தவசு காட்சி, 9.30 மணிக்கு இன்னிசை கச்சேரி, 10 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம், 11 மணிக்கு சுவாமி அம்பாள் நகா்வலம் வருதல் ஆகியவை நடைபெற்றன.