தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் மங்களூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயணிகள் வசதிக்காக ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 4.20 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் ஹைதராபாத் - மங்களூரு வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07097) வியாழக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு மங்களூரு நிலையத்தைச் சென்றடையும். மறுமாா்க்கமாக ஆகஸ்ட் 6 முதல் செப்டம்பா் 3 வரை வியாழக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு மங்களூரு நிலையத்தில் இருந்து புறப்படும் மங்களூரு - ஹைதராபாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 07098) சனிக்கிழமைகளில் காலை 4 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், யெலஹங்கா, ஹிந்துப்பூா், தா்மாவரம், ஆனந்தப்பூா், குண்டக்கல், ராய்ச்சூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.