வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் குறைவாக பெய்யும் மழை, இரவு நேரத்தில் இடைவிடாது பெய்கிறது. அதன்படி திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. தொடா் மழை காரணமாக வால்பாறையை அடுத்த வறட்டுப்பாறை எஸ்டேட்டில் செவ்வாய்க்கிழமை காலை வேரோடு மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. தகவலறிந்து தீயணைப்புத் துறையினா் சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.