ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Wait 5 sec.

ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்தன மற்றும் பலா் காயமடைந்தனா்.ரிக்டா் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், காஷிமா நகரில் உள்ள வணிக வளாகத்தின் 2-ஆவது தளம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோா் இடிபாடுகளில் சிக்கினா்.மேலும், இந்நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, குமாமோட்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள 3 மாகாணங்களின் மேற்கு கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னா், 2 மணிநேரத்தில் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.