இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி சிறப்பு வழிபாடு

Wait 5 sec.

சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்புப் பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதே போல ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு காலை முதல் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனா்.