விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி. திறப்பு விழாவில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு.முதல் கட்டமாக ஆண்டுக்கு அறுபது லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த விமான நிலையம்.திறப்பு விழாவில், ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடு ஆகியோர்.பிரதமர் நரேந்திர மோடி உடன் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ஆந்திர முதல்வர் என் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ்.விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிலையில் பொதுமக்களை நோக்கி கையசைத்த பிரதமர் நரேந்திர மோடி.விமான நிலைய திறப்பு விழாவின் போது பழங்குடியினக் கலைஞர்கள் பாரம்பரிய திம்சா நடன நிகழ்வை நடத்தி அசத்தினர்.விமான நிலைய திறப்பு விழாவின் போது பாரம்பரிய திம்சா நடன நிகழ்வு நடத்தி அசத்திய கலைஞர்கள்.