மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

Wait 5 sec.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புகோர வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஒரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வேதனையைப் பார்ப்பதைவிட வேதனை வேறு எதுவுமில்லை. வினாத்தாள் கசிந்தது, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, பல வருட உழைப்பு ஒரே இரவில் அழிக்கப்பட்டது, நேர்மையற்ற அமைப்பில் நேர்மையுடன் இருக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், இன்னமும் மாணவர்களை மன்னிக்கும் தைரியம் பிரதமருக்கு இருக்கிறது.வேதனையில் இருக்கும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் எதிர்காலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரைக்கூட அவர் சந்திக்கவில்லை.மாணவர்களுக்கு அவரது மன்னிப்பு தேவையில்ல்லை. அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய மாணவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில்தான், பிரதமர் மோடிதான் மாணவர்களிடம் மன்னிப்புகோர வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.சிஜேபி போராட்டக்காரர்களை சுற்றிவளைக்கும் காவல்துறை? பிரதமர் சொன்ன மன்னிப்பு இதுதானா? PM Modi should apologize to students, says LoP Rahul Gandhi