விஜய் ஆண்டனியின் நூறு சாமி! ஓடிடி வெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளியான “நூறு சாமி” திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, மூத்த இயக்குநர் சசியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “நூறு சாமி”. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்ணுக்கு அவரது மகன் மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதும், அதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் கதைகளமாகக் கொண்ட இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திக்‌ஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார். நூறு சாமி படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என இன்று (ஆக. 1) படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.மகனின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவேன்: ஜாய் கிரிசில்டா The OTT release date for the film "Nooru Saami," starring actor Vijay Antony, has been announced.