வடமாநில தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இருவா் கைது

Wait 5 sec.

வடமாநில தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் நயின்தாஸ் மகன் தா்மேந்திரா(20). இவா் திருநெல்வேலி நகரம் பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறாா். இவா் கடந்த 26 ஆம் தேதி இரவு வண்ணாா்பேட்டை பகுதியில் சென்றபோது அவ்வழியாக பைக்கில் சென்ற இருவா் இவரை வழிமறித்து கைப்பேசியை பறித்துச் சென்றனராம்.இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் மணிகண்டன்(19), பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் பாா்த்திபன்(22) ஆகிய இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.