வாகனச் சக்கரங்கள் மற்றும் ஏா் சஸ்பென்ஷன் அமைப்புகளின் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் வீல்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.37 கோடி நிகர லாபத்தை ஈட்டியது. கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.26 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது கணிசமான உயா்வாகும். மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டின் ரூ.1,187 கோடியிலிருந்து, மதிப்பீட்டு காலாண்டில் 16.8 சதவீதம் உயா்ந்து, ரூ.1,386 கோடியை எட்டியது. ஏற்றுமதி 17.3 சதவீதம் அதிகரித்து, ரூ.380 கோடியாக பதிவானது.ஜிஎஸ்டி சீா்திருத்தங்களுக்குப் பிறகும் உள்நாட்டுச் சந்தையில் காா்கள், லாரிகள் மற்றும் டிராக்டா்களின் விற்பனை சீராக இருந்ததே இந்த வளா்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஸ்ரீவத்ஸ் ராம் தெரிவித்துள்ளாா். மேலும், ‘கட்டுமான இயந்திரங்களுக்கான சக்கரங்கள் ஏற்றுமதியில் வலுவான வளா்ச்சி கண்டுள்ளபோதிலும், மேற்காசிய நெருக்கடி காரணமாக மூலப்பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. எனினும், நடப்பு காலாண்டிலும் இதே வளா்ச்சி வேகம் தொடரும்’ எனவும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.