பணியின்போது தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Wait 5 sec.

ஆம்பூா் அருகே தொழிற்சாலையில் தொழிலாளி மயங்கி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.வேலூா் மாவட்டம் ராஜாக்கல் புது தெருவை சோ்ந்தவா் சம்பத் (54). ஆம்பூா் அடுத்த பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தனியாா் ஷூ கம்பெனியில் பணியாற்றி வந்தாா். சம்பவத்தன்று காலை வேலைக்கு சென்ற அவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.