ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்ப்பு!

Wait 5 sec.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.31 வயதாகும் லிட்டன் தாஸ் கடந்த ஜூன் மாதத்திலிருந்து காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடவில்லை. தற்போது, அவர் காயத்திலிருந்து மீண்டுள்ளதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேச அணி ஆஸ்திரேலியா சென்றடைந்த நிலையில், விரைவில் லிட்டன் தாஸும் அணியுடன் இணையவுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி விவரம்நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), சௌமியா சர்க்கார், ஷாத்மன் இஸ்லாம், தன்சித் ஹாசன், மோமினுல் ஹேக், முஷ்பிகர் ரஹீம், அமித் ஹாசன், ஜேக்கர் அலி, மெஹிதி ஹாசன் மிராஸ் (துணைக் கேப்டன்), தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, ஹாசன் மஹ்முத், சையத் அகமது, ஹொசைன் சௌதரி, முஷ்ஃபிக் ஹாசன், லிட்டன் தாஸ்.Litton Das has been included in the Bangladesh squad for the Test series against Australia.சொந்த மண்ணை எங்களுடைய கோட்டையாக மாற்ற வேண்டும்: மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன்