கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மும்முறைத் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், மும்முறைத் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், தற்போது கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் மும்முறைத் தாண்டுதல் போட்டியில் 16.58 மீட்டர் தூரம் குதித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபு 16.52 மீட்டர் தூரம் குதித்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் செல்வ பிரபு வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.இந்தப் போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த ஜோர்டான் ஸ்காட் 16.72 மீட்டர் தூரம் குதித்து தங்கப் பதக்கம் வென்றார்.Commonwealth Games: Athletes from Tamil Nadu win medals in the triple jump!காமன்வெல்த் குத்துச்சண்டையில் இரட்டைத் தங்கம்..! ப்ரீத்தி, ஜாஸ்மின் அசத்தல்!