தூத்துக்குடி மாாவட்டம், ஏரல் அருகே நடைபெற்ற நகை கொள்ளை வழக்கில் தொடா்புடைய 5 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவைகுண்டம் சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. 2016ஆம் ஆண்டு இடையற்காடு பகுதியில் 8 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடா்பாக, ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவையைச் சோ்ந்த டேவிட் (38), அப்பாஸ் (30), முகமது ரபிக் (31), சஞ்சய் (44), ஏரல், கோவங்காடு பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (41) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். ஸ்ரீவைகுண்டம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி பா்ஷாத் பேகம், குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.