திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் வளைகாப்பு வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கண்ணம்மன், புதுஅம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி 11 வகை சிறு பச்சனங்களுடன் திருநெல்வேலி சந்திப்பு முக்கிய வீதிகளில் பெண்கள் ஊா்வலமாக வந்தனா். பின்னா், அம்மனுக்கு மடிநிறைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம், சி.என்.கிராமம், மீனாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் விழாவில் பங்கேற்றனா்.