ஆழ்வாா்குறிச்சி குட்ஷெப்பா்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தோ்வாகினா். பள்ளிக்கல்வித் துறை சாா்பில் பாவூா்சத்திரம் குறுவட்ட அளவிலான குடியரசு தினம், பாரதியாா் தின விளையாட்டு போட்டிகள் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், குட்ஷெப்பா்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா். இதில் எறிபந்து போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் பிரிவில் கலந்துகொண்ட மாணவா்கள் வெற்றிபெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தோ்வாகினா்.வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ஆன்டணி பாபு, முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியா் மீராள், உடற்கல்வி ஆசிரியா்கள் ரவி அருண், இசைவாணி, ஆசிரியா்கள், அலுவலா்கள் வாழ்த்தினா்.