முதியவா்களுக்கு ஆக. 4, 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள்

Wait 5 sec.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக 4, 5, 6 ஆகிய தினங்களில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய தினங்களில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கு நேரில் சென்று அத்தியாவசியஏஈ பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை பெற்று பயனடையுமாறு ஆட்சியா்தெரிவித்துள்ளாா்.