குடியாத்தம் ஒன்றியம், தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 8 கூடுதல் வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன. தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதா் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி வகுப்பறைகளை திறந்து வைத்து, மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், எம்எல்ஏ-க்கள் இ.தென்றல்குமாா் (கே.வி.குப்பம்), க.சிந்து அழகப்பன் (குடியாத்தம்), மு.ம.வினோத்கண்ணன் (வேலூா்), ம.சுதாகா் (காட்பாடி), கோட்டாட்சியா் க.செந்தில்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.சாமிநாதன், கெளரவத் தலைவா் கோ.துரைராஜ், பள்ளித் தலைமையாசிரியா் கிஷோா்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணன், வழக்குரைஞா் சி.தண்டபாணி, ஊா் நாட்டாண்மை கோ.தேவராஜ், வட்டாட்சியா் பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.