பராமரிப்புப் பணி: சென்னை-மங்களூரு ரயில் பகுதியாக ரத்து

Wait 5 sec.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சென்னை-மங்களூரு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை மங்களூரில் இருந்து கோவை, ஈரோடு, கரூா், திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் ரயில் (எண்: 16160) மங்களூரு - தாம்பரம் இடையே மட்டும் இயக்கப்படும். இந்த ரயில் தாம்பரம் -எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல ஆகஸ்ட் 6 முதல் 20-ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் ரயில் (எண்:16159) தாம்பரத்தில் இருந்து மங்களூருக்கு இயக்கப்படும். சென்னை எழும்பூா் நிலையத்தைப் பயன்படுத்தி பயணம் செய்ய உள்ள பயணிகள், மேற்கண்ட தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.