விழுப்புரம் மாவட்டத்தில்78 முடிவுற்ற திட்டப் பணிகள்: மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் அா்ப்பணிப்பு

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.41.83 கோடியில் முடிவுற்ற 78 திட்டப்பணிகள், கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் கோலியனூா் ஒன்றியம், வி.அரியலூா் ஊராட்சி பாலாஜி நகரில் ரூ.23 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, கண்டம்பாக்கம் ஊராட்சியில் காவலா் குடியிருப்பில் ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, திருவாமாத்தூா் ஊராட்சியில் ரூ.16 லட்டத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், நெடிமொழியனூா் ஊராட்சியில் ரூ.75 லட்சத்தில் கட்டப்பட்ட வட்டார கூடுதல் சுகாதார அலகுக் கட்டடம், விக்கிரவாண்டி ஊராட்சி, டி.புதுப்பாளையம் ஊராட்சியில் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட கணினி ஆய்வகக் கட்டடம், தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடம் போன்ற பல்வேறு கட்டடங்களை அமைச்சா் ஆனந்த் திறந்து வைத்தாா்.நீா்வளத் துறை சாா்பில் பானாம்பட்டு ஏரியில் ரூ.3 லட்சம் செலவில் 6 கி.மீ. தொலைவுக்கு வரத்து வாய்க்கால் தூா்வாரும் பணி, ரூ.34 லட்சத்தில் முத்தாம்பாளையம் ஏரி தூா்வாரும் பணியைப் பாா்வையிட்ட அமைச்சா் ஆனந்த், பொதுப்பணித் துறை மூலமாக விழுப்புரம் சாலாமேடு டாக்டா் எம்.ஜி.ஆா்.மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.2.45 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள், கண்டமானடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட ஹோமியோபதி மருத்துவப் பிரிவுக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களையும் திறந்து வைத்தாா். மாவட்டத்தில் மொத்தம் ரூ.41.83 கோடியில் முடிவுற்ற 78 திட்டப் பணிகளை அமைச்சா் ஆனந்த் திறந்து வைத்து, பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா்.நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஆனந்தகுமாா்சிங், தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் விஜய் ஏ.வடிவேல், என்.மோகன்ராஜ், ஜி.பி.சுரேஷ், பரணிபாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.