தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கொண்டம நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மேக்கிழாா்பட்டி ரயில்வே பாலம் அருகே நின்றிருந்த ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த சரத்குமாரை (24) பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, அவா் மதுப்புட்டிகளை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதேபோல, ஆண்டிபட்டி- மதுரை சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகே அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் (43) அனுமதியின்றி மதுப்புட்டிகளை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.